தமிழ் நலம் (Tamil Nalam) iyarkai muraiyil nalam pera.... moolikai vaithiyam....

                                               
                       



இணையதள வாசகர்ளுக்கு  வணக்கம் . இந்த  இணையதளதின்

வாயிலாக  உங்களை  சந்திப்பதில்  நான்  பெருமகிழ்ச்சி

அடைகிறேன். சில  நாட்களுக்கு  முன்பாக  என்  நண்பரின்

வீட்டிற்கு  சென்று  இருந்தேன் . நண்பரின்  மனைவி  வாங்க

அண்ணா  வீட்டில்  எல்லாரும்  நல்லா  இருக்காங்களா?

என்றபடி  தண்ணீர்  கொண்டுவந்து  கொடுத்தார். தண்ணீரை

குடித்து கொண்டிருக்கும்போது...  என் நண்பன் வந்தான்.

என்னடா  வீட்டுப்பக்கம்  வந்து ரொம்ப   நாளவுது . நா  ஒருத்தன்

இருக்கிறதையே மறந்துட்டியா  என்றான்.  நானும்  அவனும்

பேசிட்டு இருக்கும்போது... நண்பனின்  மகன்  விளையாடி

களைத்துப்போய்  (மொபைல் கேம் )  அம்மா  பசிக்குது  சாப்பாடு

போடு. என்றதும்  மறுகணம்  சாப்பாடு  தட்டில்  வந்தது . பையன்

அலறினான். காரத்தால் அல்ல, ஏமா இந்த  சிவப்பு  கலர்  சட்னி

செய்யாத, செய்யாதனு  எத்தனை தடவ  சொல்லரே கேட்கவே

மாட்டேங்கரே. எனக்கு  எப்பவுமே  பச்சை கலர் சட்னிதான்

பிடிக்கும்னு உனக்கு  தெரியாதா? என்றான். நான்

சிரித்துக்கொண்டே  கேட்டேன் , அது  என்னமா  பச்சை கலர், சிவப்பு

கலர் சட்னி என்றேன். நண்பனின்  மனைவி சொன்னால்,  அவனுக்கு

சட்னியோட பேர் தெரியாதுங்க  அண்ணா. அதான்  பச்சை கலரு ,

செவப்பு  கலருன்னு  சொல்லறான் என்றால்.  அதன் பிறகு  நான்

அவனிடம் போய்  இது  பீட்ருட்  சட்னி.  இது சாப்பிட்டா  உடலுக்கு

பல  நன்மைகள்  செய்யுது என்று, விளக்கி  சாப்பிட வைத்தேன்.

வாசகர்களே...  நாம்தான்  நம்  குழந்தைகளுக்கு  உணவுகளை

பற்றியும்,  சில  மூலிகைகள்  அதன் பயன்கள்   பற்றியும்,

புரிய வைக்கவேண்டும். இன்னும்  நமக்கே மூலிகைகள்  பற்றிய

சரியான  புரிதல் , அறிதல் இல்லை. பிறகு எப்படி  நாம்  நம்

குழந்தைகளுக்கு  சொல்லி கொடுப்பது?  மூலிகை  என்றாலே  அது

அமேசான் காட்டுலயும் , மலங்காடுகளில்  மட்டும்தான்  இருக்கும் ,

அப்படிங்கற  நம்  எண்ணத்தை  முதலில்  வேரறுப்போம்.

மூலிகைகள் நம்  கண்முன்னே  நிறையவே  இருக்கிறது. உங்கள்

வீட்டின்  அருகில், வாய்க்கால்  வரப்பில், சாலைஓரம்  என்று பல

இடங்களில் புதர் போல  கிடக்கிறது. ஒவ்வொரு  செடிகளுக்கும்  

ஒவ்வொரு மருத்துவகுணம் உள்ளது. நாம்தான்  அதை  சாதாரண

செடிகொடி  என்று  நினைத்து,  அதன்  அசாதாரணமான

பலன்களை  பெற தவறுகிறோம்.  இனிமேல்  அதன்  மகத்துவத்தை

உணர்த்தும்  வகையில்  இந்த  தமிழ் நலம்  என்கிற

இணையதளதின் வாயிலாக  நிச்சயம்  மூலிகைகள் பற்றியும் ,

அதன் பலன்கள் பற்றியும்  நோய்களுக்கு  மருந்து மாத்திரை

தவிர்த்து,  இயற்கை முறையில்  நோய்களை  குணமாக்குவது

எப்படி என்பதுபற்றியும்  தெரிந்து  கொள்வீர்கள். அதற்க்கு  இந்த

பக்கத்தை  தொடருங்கள். செடிகளையும், மூலிகைகளையும் பற்றி 

தெரிந்து  கொள்ளுங்கள், மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

இதை  யூடூப்பில்  வீடியோவாக  பார்க்க.......





 https://www.youtube.com/channel/UCegUTXN2ETQUJYra9KfjJmw  என்கிற

லிங்க்கை  கிளிக்  செய்யவும் . அல்லது  யூடூப்பில்   Tamil Nalam என  

தேடவும். இதில்  வரக்கூடிய  தகவல்கள்  தொடர்ந்து பார்க்க 

வேண்டும்  என்றால்  இந்த சேனலை 



                                                                                                                               செய்யவும் .



 முடிந்த வரையில் வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் இயற்கை 

வழியில்  நலம்  பெறுவோம், நன்றி  வணக்கம்.














                                                

Comments

Popular posts from this blog

சர்க்கரை நோயின் தீவிரம் கட்டுக்குள் இருக்க.

சோற்றுக் கற்றாழையின் அளவில்லாத பல நன்மைகள் !!!

வெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்!!!