காபி குடிக்கலாமா ?

                       
                                   
                             காபிகுடிக்கலாமா?



தினமும் காலையில் எழுந்ததும் ஒரு கப் காபி இல்லை என்றால், இன்றைக்குப் பலருக்கும் வேலையே ஓடாது. காபி உடலுக்குக் கெடுதல் என்ற என்ற கருத்துதான் நம் ஊரில் உள்ளது. எதையுமே அளவோ எடுத்துக்கொண்டால் கெடுதல் இல்லை... ஆனால், அளவுக்கு அதிகமாகச் செல்லும்போதுதான் பிரச்னையே. இன்றைக்குச் சர்வதேச காபி தினம். ஏன் காபி அருந்த வேண்டும் என்பதற்கான ஆறு  காரணங்களைத் தெரிந்துகொள்வோம். 



1.எனர்ஜி அளவை அதிகரித்துச் சுறுசுறுப்பாக்குகிறது: சோர்வாக இருக்கும்போது காபி குடித்தால் புத்துணர்வை உணரலாம். இதற்குக் காபியில் உள்ள காஃபின் என்ற ரசாயனம் தான் காரணம். ரத்தத்தில் கலக்கும் காஃபின், மூளைக்குச் சென்று தூண்டுகிறது. இதனால், மூளையில் உள்ள டோபோமைன் உள்ளிட்ட நியூரோடிரான்ஸ்மிட்டர்கள் சுரந்து மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கும் மனநிலையை ஏற்படுத்தும். 

2.மன அழுத்தம் போக்குகிறது: காபிக்கும் மனிதனின் மனநிலை, விழிப்புநிலை, எனர்ஜி அளவு அதிகரிப்பதற்கும் ஆழமான தொடர்பு உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காபி மன அழுத்தத்தைப் போக்குகிறது. மனதை உற்சாகமாக வைத்திருக்கிறது. இதுவே, அளவுக்கு அதிகமாகும்போது வேறுவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை நினைவில்கொள்ள வேண்டும். 

3.கொழுப்பை எரிக்கிறது: கொழுப்பைக் கரைக்கும் என்று விற்பனை செய்யப்படும் எல்லாச் சத்து பானங்களிலும் காஃபின் இருக்கிறது. இதற்குக் காரணம், காஃபின் கொழுப்பை எரிக்கப் பயன்படுகிறது என்பதுதான் காரணம். காஃபின் ரசாயனம் உடலில் உள்ள கொழுப்புச் செல்களை உடைத்து அதை ஆற்றலாக மாற்ற உதவுகிறது. இதற்கு, சர்க்கரை, பால் சேர்க்காமல் காபி அருந்த வேண்டும். அதுவும், டயட், உடற்பயிற்சியுடன் காபி அருந்தும்போது நல்ல பலனைத் தரும். 

4.ஊட்டச்சத்து அளிக்கிறது: காபியில் ரிபோஃபிளேவின், நியாசின், வைட்டமின் பி5, பொட்டாசியம் உள்ளிட்டவை இருக்கின்றன. இவை உடலுக்கு ஊட்டச்சத்து அளிக்கின்றன. இதனால், வாழ்நாளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. 

5.சர்க்கரை நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது: டைப் 2 சர்க்கரை நோயாளிகளின் தலைநகரமாக இந்தியா மாறிக்கொண்டிருக்கிறது. இதற்குப் போதுமான அளவு இன்சுலின் சுரக்காமை அல்லது இன்சுலின் செயல்திறன் குறைவு காரணமாக இருக்கிறது. இதனால், டைப் 2 சர்க்கரை நோய் ஏற்படுகிறது. தொடர்ந்து காபி அருந்தி வருபவர்களுக்கு 20 முதல் 50 சதவிகிதம் வரை சர்க்கரை நோய்க்கான வாய்ப்புக் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 


6.அல்சைமர் மற்றும் மறதிநோயைத் தவிர்க்கிறது: காபி மூளையைத் தூண்டி சுறுசுறுப்பாக வைக்கக் கூடியது. மூளையின் இந்தச் செயல்பாடு அல்சைமர் மற்றும் மறதி நோய் உள்ளிட்ட பல பாதிப்புகளில் இருந்து மனிதர்களைக் காக்கிறது. தொடர்ந்து காபி அருந்துபவர்களுக்கு 65 சதவிகிதம் அளவுக்கு அல்சைமர் வருவதற்கான வாய்ப்புக் குறைகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


முக்கியமாக  நாட்டு  (கரும்பு ) சர்க்கரையை  பயன்படுத்துங்கள்  நன்றி  வணக்கம் .

Comments

Popular posts from this blog

சர்க்கரை நோயின் தீவிரம் கட்டுக்குள் இருக்க.

சோற்றுக் கற்றாழையின் அளவில்லாத பல நன்மைகள் !!!

வெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்!!!